கல்லூரி மாணவி தற்கொலை

சாத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-26 19:30 GMT
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா மம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா (வயது 18). அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சில மாதங்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்