மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-26 19:21 GMT
மதுரை, 
மதுரை ஆத்திகுளம் கனகவேல் தெரு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). சம்பவத்தன்று இவர் ரேஸ்கோர்ஸ் காலனி போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே அழகர் சாமியை கும்பிடசென்று இருந்தார். அப்போது கூட்டத்தில் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் யாரோ பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்