விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலி
அருப்புக்கோட்டை அருகே விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் கரும்புலி வீரப்பன் வீரசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட கலை பிரிவு செயலாளராக இருந்தார். விஜயகுமாருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டை கடந்த நிலையில் அவருடைய மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் நேற்று மோட்டார் சைக்கிளில் காந்திநகரில் இருந்து சர்வீஸ் சாலையில் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து புறவழிச்சாலையில் அருப்புக்கோட்டைக்கு வந்த கார், சர்வீஸ் சாலையில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக விஜயகுமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து டவுன் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த ஸ்தபதி ரவிச்சந்திரன் (வயது 65) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.