புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டியாவயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த விளாத்துபட்டியை சேர்ந்த ராசு (வயது 29), பாலன் நகரை சேர்ந்த ரமேஷ் அரவிந்த் (28), தினேஷ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.