விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைக்கு விண்ணப்பிக்கலாம்

விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-26 19:02 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டங்கள் செய்ய மற்றும் பொதுமக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு தேவையான வண்டல் மண், களிமண், சவுடுமண் ஆகியவற்றை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் பட்டியல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உதவி இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை வாயிலாக கலெக்டருக்கு சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அனுமதி பெற்றவர்கள் மேற்கண்ட மண்ணை எடுத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்