விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2022-04-26 18:54 GMT
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி நேற்று காலை மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை காமராஜ்நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர், தேரடி தெரு, தெற்குதெரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்களை வைத்து வாணவேடிக்கை மற்றும் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பூக்களை மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதில் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

மேலும் செய்திகள்