போலி டாக்டர் கைது

திருப்பத்தூர் அருகே போலி டாக்டர் கைது ெசய்யப்பட்டார்.

Update: 2022-04-26 18:53 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா ஜம்மணபுதூர் ஆத்துமேடு பகுதியில் முனியப்பன் (வயது 58) என்பவர் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருந்து மற்றும் ஊசி மருந்துகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். 

இதுகுறித்து அரசு டாக்டர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, முனியப்பனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்