புனித பெரியநாயகி மாதா ஆலய தேர்பவனி
புனித பெரியநாயகி மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.
ஆதனக்கோட்டை:
பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழா நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.