பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது

வேலூரில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பீகாரை சேர்ந்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-26 18:22 GMT
வேலூர்

வேலூரில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பீகாரை சேர்ந்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவியிடம் தவறாக...

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது சலாவுதீன் (வயது 38), பொம்மை வியாபாரி. இவர் வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகமது சலாவுதீன் வசிக்கும் தெருவின் வழியாக 15 வயதுடைய மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார். இதனை அவர் சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு வழக்கம்போல் நடந்து சென்று கொண்டிருந்தார். முகமது சலாவுதீன் வீட்டின் அருகே மாணவி வந்தபோது தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை கவனித்த முகமது சலாவுதீன், வேக வேகமாக சென்று மாணவியின் முன்பாக நின்றார். பின்னர் அவர் திடீரென ஆடைகளை அவிழ்த்து மாணவியை பார்த்து சைகை காட்டி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பீகார் வியாபாரி கைது

அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்து கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரின் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் விரைந்து சென்று மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் நடந்த சம்பவங்களை பொதுமக்களிடம் அழுதபடி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் முகமது சலாவுதீனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா (பொறுப்பு) விசாரணை நடத்தினார். அதில் அவர், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. அதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது சலாவுதீனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்