புதிய மத்திய சிறைச்சாலை அமைக்க திட்டம்

மதுரை இயைப்பட்டியில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2022-04-26 18:08 GMT
மதுரை,
மதுரை இயைப்பட்டியில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர் கால சிறை
மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது மத்திய சிறைச்சாலை. இந்த சிறை ஆங்கிலேயர் காலத்தில் 1865-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதி என 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மேலும் பெண்கள் சிறையும் அதன் உள்ளே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறையில் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
 மெயின் ரோட்டில் அருகே சிறை அமைந்து இருப்பதால் தடை செய்யப்பட்ட பொருட்களை சமூக விரோதிகள் சிறைக்குள் வீசும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இதை தவிர்க்க சென்னை புழல் சிறை போல் மதுரை மத்திய சிறையை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அமைச்சர் ரகுபதி மதுரை மத்திய சிறை ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித் தார். அதன்படி மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை அமைந்துள்ள இடம் அருகே மத்திய சிறையை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பகுதியில் 80 ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலையை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
ஒப்புதல்
இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்ததும் புழல் சிறை கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு புதிய மத்திய சிறை கட்டுமான பணி தொடங்கப் படும் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்