ஏரியூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

ஏரியூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-26 17:59 GMT
ஏரியூர்:
ஏரியூர்  வனப்பகுதியில் வனவர் நடராஜ் தலைமையிலான குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள்  செல்லமுடி பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது28), சிவகுமார் (33) என்பதும், காட்டுப்பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்