கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தாளப்பள்ளியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 19). இவருக்கும், திருமலைவாசன் (31) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 24-ந் தேதி விஜயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி ஒரு ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.