புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சிங்காரப்பட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை போலீசார் எலவம்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டி கடை ஒன்றில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் அர்ஜூனன் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.