ஓசூரில் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா
ஓசூரில் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஓசூர்:
தமிழியக்கம்-பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஓசூர் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழியக்க நிறுவன தலைவரும், வி.ஐ.டி. வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி வரவேற்றார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி நூல் துற அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு மேயர் சத்யா மற்றும் கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கி மாநகராட்சி கவுன்சிலர்கள் மக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளிலேயே ஓசூர், சிறந்த மாநகராட்சியாக திகழ வேண்டும் என்று பேசினர். இதில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., துணை மேயர் ஆனந்தய்யா, தமிழியக்க மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார் மற்றும் கருமலை தமிழாழன், ராஜு உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர் ஆர்.குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.