‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-04-26 19:00 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி கிழத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள பைப்புகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் இருந்து குடிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.

மேலும் செய்திகள்