வரிமட்டி சேகரித்த 8 பேர் கைது
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் வரிமட்டி சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் வரிமட்டி சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது.
வரிமட்டி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் மருத்துவத்துக்கு பயன்படும் வரிமட்டிகளை சிலர் சேகரித்து கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து அலையாத்திக்காடு மற்றும் கடல் பகுதியில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் படகு ஒன்றை சோதனையிட்டனர்.
அதில் 46 கிலோ வரிமட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சிலர் அனுமதியினறி வரி மட்டிகளை சேகரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து படகு, வரிமட்டி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
8 பேர் கைது
இதுதொடர்பாக அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கராசு (வயது50), மகேந்திரன் (63), கருப்பையன் (67), பழனியப்பன் (55), ராஜலிங்கம் (70), முத்துப்பேட்டை ராமன் கோட்டகம் சுரேஷ் (42), செல்வராஜ் (50), ராமையன் (45) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.