மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது
மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் மற்றும் போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு தனியார் பள்ளி அருகில் சென்ற போது சந்தேகத்திற்கிடமான முறையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ராஜித் (வயது22), காரியாவிளையை சேர்ந்த ஷாஜ ஸ்டாலின் (20), குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஸ்டெர்லின் பேப்டிஸ்ட் (21) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய 200 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சா பொட்டலம் மற்றும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.