சங்கராபுரம் அருகே இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
சங்கராபுரம் அருகே இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மனைவி செல்வி(வயது 28). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி பிரியா(42) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று செல்வி அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது, முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு இருந்த பிரியா அரிவாளால் செல்வியின் இடது கையில் வெட்டியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பிரியா மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.