பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
குமாரபுரம் அருகே காதல் தோல்வியால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பத்மநாபபுரம்:
குமாரபுரம் அருகே காதல் தோல்வியால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவர்
குமாரபுரம் அருகே உள்ள ஈத்தவிளையை ேசர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவருடைய மகன் ஜிஜின் (வயது17). கடமலைகுன்று பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறி, ஜிஜினிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுைடந்த ஜிஜின் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஜிஜின் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக, ‘நான் வாழ விரும்ப வில்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என்று தகவல் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், ஜிஜின் அறையில் வெகுநேரமாக விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கண்ட அவரது தந்தை விளக்கை அணைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு ஜிஜின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து கதறி அழுதார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஜிஜினை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஜிஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிகோடு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.