10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போளூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி. அவரது மகன் பவன்குமார் (வயது 19), செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது அக்காள் கால்பந்தாட்ட வீராங்கனை.
இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீராங்கனையான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் போது பழக்கம் ஏற்பட்டு, தோழி ஆனார்கள். இதனால் இருவரும் போனில் பேசி வந்தனர்.
இதை கவனித்த பவன்குமார், பின்னர் கபடி வீராங்கனையை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியை பனப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகார் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போளூர் நற்குன்று பகுதியில் இருந்த பவன்குமாரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.