கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 தொகுதிகளில் போட்டியா?
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.;
உப்பள்ளி: முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது. சிலர் குஜராத் தேர்தலின்போது கர்நாடக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தக்கூடும் என்று சொல்கிறார்கள். அது தவறானது. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தான் தேர்தல் நடைபெறும். அதே போல் முதல்-மந்திரி மாற்றமும் நடைபெறாது. அந்த பதவியில் பசவராஜ் பொம்மையே நீடிப்பார்.
அவர் 2 தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெறவில்லை. இது வெறும் வதந்தி. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
======================