விழுப்புரம்,
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரதாப் மனைவி அம்மு (வயது 40). இவருடைய தோழி பிரியா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தார்.
வாடகை சரிவர தரவில்லை என்று கூறி பிரியாவை அந்த வீட்டின் உரிமையாளர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அதன் பிறகு அவர், அம்மு வீட்டில் தங்கியிருந்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (42), வினோத் (34) ஆகியோர் அம்முவின் வீட்டிற்கு சென்று பிரியாவின் நடத்தை சரியில்லை என்றும், நீங்கள் எப்படி அவரை உங்கள் வீட்டில் தங்க வைக்கலாம் என்று கூறி அம்முவையும்,
பிரியாவையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.