கோ பூஜையின் போது மாடு முட்டியதில் விவசாயி காயம்; முதல்-மந்திரி காயம் இன்றி தப்பினார்

கோ பூஜையின் போது மாடு முட்டியதில் விவசாயி காயமடைந்தார் .முதல்-மந்திரி காயம் இன்றி தப்பினார்

Update: 2022-04-26 16:47 GMT
விஜயாப்புரா: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விஜயாப்புராவில் கொட்டகைகளில் மாடுகள் இருந்தன. அங்கு சென்ற பசவராஜ் பொம்மை மாடுகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து கோ பூஜை செய்தார். அப்போது ஒரு மாடு திடீரென அருகில் இருந்து விவசாயியை முட்டி தள்ளியது.

மாடு முட்டியதில் அருகிலேயே இருந்த பசவராஜ் பொம்மையும் சற்று தடுமாறினார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பசவராஜ் பொம்மை, மாடுகளுக்கு கோ பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கடந்த பிறந்த நாள் அன்று மாடுகளை தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்