வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஒட்டன்சத்திரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-04-26 16:43 GMT
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் கைராசிநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், தனது வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். 

வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. 

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சின்னசாமி புகார் செய்தார். அதன்பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்