லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலியானார்

Update: 2022-04-26 16:41 GMT
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே உள்ள அகரஎலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வினோத் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு அகரஎலத்தூர் கிராமத்திலிருந்து வடரங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வடரங்கத்திலிருந்து மெயின் ரோட்டில் அரசமரம் அருகே அவர் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், வினோத் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து  கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்