கல்லூரி மாணவர்களுக்கு கலைப்போட்டி

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான கலைப்போட்டி நடந்தது.;

Update: 2022-04-26 16:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவின் வணிக செயலாட்சியியல் துறை சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி ஏ.பி.சி. கல்லூரி மாணவிகள் முதல் இடத்தையும், புனித செயிண்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் சோமு, பொருளாளர் முத்துசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் நாகராஜன், இயக்குனர் அருணாசல ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கருப்பசாமி வரவேற்று பேசினார். கல்லூரி துணை செயலாளர் மோகன்ராஜ், நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்