சங்கராபுரத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2022-04-26 16:18 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா வரவேற்றார். 

இதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 21 குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்த பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திட்ட உதவியாளர் கிருஷ்ணவேணி, மேற்பார்வையாளர்கள் சித்ரா, சரஸ்வதி, ரமணி, பிரேமா, சிவகாமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்