மலேரியா தின விழிப்புணர்வு ஊர்வலம்

தலைஞாயிறில் மலேரியா தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-04-26 16:17 GMT
வாய்மேடு:
 தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜீவிதா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் கீர்த்தனா, தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா வரவேற்றார். தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அக்ரகாரம், மேலத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக  சென்று மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. இதில் சுகாதார செவிலியர்கள், டாக்டர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்