புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி

தாணிக்கோட்டகத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2022-04-26 16:17 GMT
வாய்மேடு:
 வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் தெற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடந்தது.விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.. முன்னதாக ஊராட்சி மன்றதலைவர் முருகானந்தம்  வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கிரிதரன், முருகானந்தம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மலர் மீனாட்சிசுந்தரம், தேவி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒப்பந்தக்காரர் அருண் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்