டிரான்ஸ்பார்மரில் மோதிய கார்; டிரைவர் உயிர் தப்பினார்

விளாத்திகுளம் அருகே டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2022-04-26 15:52 GMT
எட்டயபுரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஜோசப் பால்சிங் மகன் உதயா ஜம்பூ. இவர் நேற்று பரமக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். விளாத்திகுளம் அருகே சூரங்குடியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உதய ஜம்பூ லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதமடைந்தது. சூரங்குடி, வேம்பார், சண்முகபுரம், பச்சையாபுரம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்