மாணவ-மாணவிகளை கட்டாயம் பைபிள் படிக்க கூறிய தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
பெங்களூருவில் மாணவ-மாணவிகளை கட்டாயம் பைபிள் படிக்க வேண்டும் என்று கூறிய தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிகல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
பெங்களூரு:
பைபிள் படிக்க கூறிய பள்ளி
பெங்களூருவில் கிளாரன்ஸ் பள்ளியில் கிறிஸ்தவ மத புனித நூலான பைபிள் கட்டாயம் படிக்க என்று
அப்பள்ளி நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெற்ேறார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் பள்ளி குழந்தைகளை கட்டாயம் பைபிள் படிக்க கூறிய பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விளக்கம் கேட்டு நோட்டீசு
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு கிளாரன்ஸ் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் பைபிளை கட்டாயம் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள விஷயம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது கர்நாடக கல்வி சட்டத்திற்கு எதிரானது. அதனால் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எந்த பள்ளியிலும் மதங்கள் குறித்து கற்பிக்க கூடாது என்று சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு எதிரானது
ஆயினும் அந்த பள்ளி நிர்வாகம் பைபிள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. அந்த பள்ளி நிா்வாகம் அளிக்கும் பதில் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். கிளாரன்ஸ் பள்ளி பாடத்திட்டம் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் வருகிறது.
எந்த பள்ளியாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட மதத்தின் நூலை படிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.
அனைத்து பள்ளிக்கு அனைத்து மதங்களை சேர்ந்த குழந்தைகளும் படிக்க வருகிறார்கள். விதிமுறைகளின்படி பாடம் கற்பிக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை மேற்கொள்வோம்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.