ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

தூத்துக்குடியில் ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-26 15:46 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி ரெயில்வே போலீசார் ரெயில்களில் ஏதேனும் பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலில் வந்த தஞ்சையை சேர்ந்த மனோகரன் என்பவர் 50 பெரிய பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரெயில்வே போலீசார் மனோகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்