கூடலூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடலூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா செளுக்காடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சுமதி (வயது 20). இவருக்கும் பாடந்தொரை பகுதியைச் சேர்ந்த சதீஷ் பாபு என்ற மணிகண்டனுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுமதி கணவருடன் பாடந்தொரையில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.