பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்; கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-04-26 11:29 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 கொரோனா பரவல்

தமிழகத்தில் தொற்று பாதிப்பு தற்போது கனிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். 

அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை கண்டக்டர் மற்றும் டிரைவர் கண்காணிக்க வேண்டும். வழிப்பாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

 தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்