கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவர் கைது - விபசாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம்
விபசாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே கடந்த 18-ந் தேதி 23 வயதுடைய இளம் பெண் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் காவேரி பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் மனைவி பிரியா என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விபச்சார புரோக்கருடன் சேர்ந்து பிரியா விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நவீன் கள்ளக்காதலி கல்பனாவுடன் சேர்ந்து பிரியாவை கொன்றதாக ஒப்புகொண்டார். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.