சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் சிக்கிய பயணியை மீட்ட பெண் போலீஸ் - அதிகாரிகள் பாராட்டு

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் சிக்கிய பயணியை மீட்ட பெண் போலீஸ்-க்கு ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

Update: 2022-04-26 03:54 GMT
சென்னை, 

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று முன்தினம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரவு 4-வது நடைமேடையில் இருந்து மலைக்கோட்டை ரெயில் (வண்டி எண்:12653) திருச்சி நோக்கி புறப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக ரெயிலில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து திடீரென தவறி விழுவதை, நடைமேடை 4-ல் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் மாதுரி கவனித்தார். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட அவர் ஓடும் ரெயிலில் சிக்கிய பயணியை உடனடியாக இழுத்து மீட்டார். இதையடுத்து அந்த பயணி தனது உயிரை மீட்ட போலீஸ் மாதுரிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அனைவரும் விரைவாக செயல்பட்டு, பயணியை காப்பாற்றிய மாதுரியை பாராட்டினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்