இருப்பு பதிவேடு பராமரிக்காத உரக்கடைகள் மீது நடவடிக்கை

இருப்பு பதிவேடு பராமரிக்காத உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-25 21:53 GMT
பெரம்பலூர்:
சிறப்பு குழுவினர் 99 உரக்கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, உர இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல் ஆகியவை பராமரிக்காதது, உண்மை உர இருப்பிற்கும், விற்பனை முனை இருப்பிற்கும் வேறுபாடு காரணமாக 2 தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உர இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்காத ஒரு தனியார் உர விற்பனை நிலையத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி, சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்