வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
பாலியல் தொந்தரவு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குமணந்துறை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறை தண்டனை
மேலும் இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டு நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அதில், அருள்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.