வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-25 21:28 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித்குமார்(வயது 29). இவர், அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கடலை செடிகளை அவரது வயலில் இருந்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அமிர்தராயன்கோட்டையை சேர்ந்த சின்னதுரையின் மகன் ஸ்டாலின்(35) என்பவர், அஜித்குமார் ஓட்டிவந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, இந்த பாதை வழியாக ஏன் செல்கிறீர்கள்? என்று கேட்டு கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அஜித்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அஜித்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

மேலும் செய்திகள்