தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளி கொலை

ராமநகரில் தலையில் கல்லைப்போட்டு கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-25 21:12 GMT
பெங்களூரு: 

ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா அருகே தட்டகெரே கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன் தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் இரவு தட்டகெரேவுக்கு பிரவீன், மனைவியுடன் வந்தார். அப்போது பிரவீன் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அந்த அழைப்பை எடுத்து பேசியபடி வெளியே சென்ற பிரவீன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கிராமத்தில் உள்ள காலி இடத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நிலையில் பிரவீன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சன்னப்பட்டணா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்