ஆறு, கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் சாவு
உத்தரகன்னடா, பீதர் மாவட்டங்களில் ஆறு, கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா கரிகால் கிராமத்தில் கங்கவள்ளி ஆறு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கரிகால் கிராமத்தை சேர்ந்த மகேஷ் நாயக் (வயது 17) என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்களான நாகேந்திரா நாயக், திலீப் பாபு ஆகியோருடன் கங்கவள்ளி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதுபோல பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா பகதூரா கிராமத்தை சேர்ந்தவர் சூர்யகாந்த் (43) இவரது மகன் அபிஷேக் (16) இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, அபிஷேக்கிற்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்றபோது 2 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.