பவானிசாகர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பவானிசாகர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-25 20:53 GMT
பவானிசாகர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை  மறியல்
பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் உள்ள சத்தி-மேட்டுப்பாளையம் ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை அமைக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இதன் அருகே குடிநீர் குழாய் செல்கிறது.
சாக்கடை அமைக்கும் பணி
இதனால் கழிவுநீர் குடிநீரில் கலக்க வாய்ப்பு இருப்பதால் குடிநீர் குழாயை இரும்பு குழாயாக அமைக்க வேண்டும். மேலும் கழிவுநீர் வடிகால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘விரைவில் சாக்கடை அமைக்க குழி தோண்டும் பணி செய்து முடிக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சத்தி-மேட்டு்ப்பாளையம

மேலும் செய்திகள்