தி.மு.க. அமைப்பு தேர்தல் வேட்புமனு
ெகங்கவல்லியில் தி.மு.க. அமைப்பு தேர்தல் வேட்பு மனுதாக்கல் நடந்தது. இதில் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டார்.;
கெங்கவல்லி:-
கெங்கவல்லியில் தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டு வேட்புமனுக்களை வழங்கினார். மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் வரதராஜன், மதுரை மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசார், ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், கெங்கவல்லி பேரூர் பொறுப்பாளர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தங்கபாண்டியன், அருண்குமார், சையது, முருகேசன், லதா மணிவேல், ஹம்சவர்த்தினி குமார், சத்தியா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.