தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-04-25 20:26 GMT
போக்குவரத்திற்கு இடையூறு
 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 35-வது வார்டில் உள்ள  தார்சாலையில் சிலர் குப்பைகளையும், இதர கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், மின்கம்பத்தை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
துரைக்கண்ணு, காரைக்குடி.
சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா?
 விருதுநகர் மாவட்டம் சிவகாசி 24-வது வார்டு பள்ளப்பட்டி ரோடு முருகன் காலனியில் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நிறைவு பெறவில்
லை. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவிசெல்வம், திருத்தங்கல்.
குப்பை தொட்டி தேவை 
 மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி அம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டி இல்லை. ஆதலால் வீடுகளில் உள்ள குப்பைகளை சிலர் சாலைகளில் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகின்றது. ேமலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேவையான இடங்களில் குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                             
கோபிநாத், சிந்தாமணி.
நாய்கள் தொல்லை
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாய்க்கடியால் தினமும் பலர் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நாய்களின் அட்டகாசத்தால் தெருவில் நடமாடவே அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்களால் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.                               முருகன், திருவாடானை.
 பயன்படுத்த முடியாத சாலை
 விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் கிராமத்தில் இருந்து அன்பின் நகரம் செல்லும் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.                           ெசல்வராஜ், பனையடிப்பட்டி.
 தேங்கி நிற்கும் கழிவுநீர்
 மதுரை வில்லாபுரம் 84-வது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் ெபாதுமக்கள் சாலையில் நடக்க முடியாத நிலை உள்ளது. மேலும்கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் பரவுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், மதுரை.

மேலும் செய்திகள்