இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-25 20:19 GMT
சுரண்டை:

சுரண்டை அருகே கீழச்சுரண்டை மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் சூர்யா (வயது 32). கிளி ஜோதிடம் பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இசக்கி ஜோதி (26). சூர்யாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் சூர்யா வெளியே சென்ற பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் இசக்கி ஜோதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கி ஜோதியின் தந்தை மாடசாமி சுரண்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்