கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

தென்காசியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-25 20:07 GMT
தென்காசி:

தென்காசி  ரெயில்வே பீடர் ரோடு மேரி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் கார்த்தி (வயது 26). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 23-ந் தேதி கார்த்தி தனது வீட்டில் சுவற்றில் தனது தலையை முட்டிக்கொண்டு இருந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கார்த்தியை பரமசிவன்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இரவில் திடீரென்று கார்த்தி வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு படையினர் சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். விசாரணையில் காணாமல் போன கார்த்தி என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்