மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு
பணகுடி அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியானார்.
வடக்கன்குளம்:
பணகுடி அருகே பேவர்பிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பீகார் மாநிலம் மதுபாணியைச் சேர்ந்த நடல் சாய் மகன் அன்ஜிகுமார் (வயது 18) என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலையில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.