80 மதுபாட்டில்கள் பறிமுதல்

தாயில்பட்டி அருகே 80 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-04-25 19:47 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி பஸ்ஸ்டாப்பில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீசார் ‌வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரவார்பட்டியை சேர்ந்த கருப்பையா (45) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 30 மது பாட்டில்களையும்,  பெத்தலேகம் கிராமத்தை சேர்ந்த யேசுகனி (வயது 42) என்பவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்