ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

Update: 2022-04-25 19:45 GMT
திருச்சி ஏப்.26-
திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் அருகே வசிப்பவர் கண்ணன் (வயது 50). ரெயில்வே ஊழியரான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவு 11 மணி அளவில் அங்கு வந்த 2 வாலிபர்கள் இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஸ்டாலின் (21) மரிய ஜான் போஸ்கோ (21) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்