பூங்கா அமைய உள்ள இடத்தை அதிகாரி ஆய்வு
காரியாபட்டி பேரூராட்சியில் பூங்கா அமைய உள்ள இடத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகும். காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள், சிறுவர்கள் பொழுது போக்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் பூங்கா எதுவும் இல்லாததால் காரியாபட்டி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காரியாபட்டியில் பூங்கா அமைக்க தங்கம் தென்னரசு உத்தரவிட்டதன் பேரில் காரியாபட்டி பாம்பாட்டி செல்லும் சாலையில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், காரியாபட்டி செயல்அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் சந்தோஷம், பொறியாளர் கணேசன், கவுன்சிலர் சங்கரேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.